திரவுபதி முர்மு பதவியேற்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

திரவுபதி முர்மு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பதவியேற்ற பின் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகளை குறிப்பிட்டார். குறிப்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரை குறிப்பிட்டார்.
“வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ஆகியோர்கள் புதிய உயரங்களை அளித்துள்ளனர். மேலும் உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும். கோடிக்கணக்கான நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். குடியரசு தலைவராக இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக பணியாற்றுவேன். 75வது சுதந்திர தினத்தில் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் புனித நாடாளுமன்றத்தில் இருந்து மக்களை வணங்குகின்றேன்” என்று திரவுபதி முர்மு பேசினார்.