திருச்சி மாவட்டத்திற்கு 29ஆம் தேதி விடுமுறை!

Filed under: தமிழகம் |

வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். இதனையொட்டி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.