திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் போராட்டம்!

Filed under: தமிழகம் |

இந்து முன்னணியினர் திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்களுடன் போராட்டம் நடத்தியதில் போலீஸ் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்தப்பட்டனர்.

திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார். இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது. அநியாயமாக கட்டணம் வசூலிப்பதாக கூறி கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர்.