திருச்செந்தூரில் தரிசன கட்டணம் உயர்வு!

Filed under: தமிழகம் |

கந்தசஷ்டி விழாவிற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தரிசனம் செய்வதற்கு 100 ரூபாய் தரிசன கட்டணம் தற்போது 2 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று முன் தினம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் இந்த வாரம் முழுவதுமே பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி வருகை தருகின்றனர். ஆனால் தற்போது கட்டணங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் சிறப்பு தரிசன வரிசை, பொது தரிசன வரிசை என இரண்டு வழிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 கட்டணமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ரூ.1000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல சாதாரண நாட்களில் ரூ.500, விசேஷ நாட்களில் ரூ.2000 என வசூலிக்கப்பட்டு வந்த அபிஷேக தரிசன கட்டணம் தற்போது ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல கோயில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் செல்லும் அரசு பேருந்துகளுக்கும் நுழைவு கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டதால் அரசு பேருந்துகள் அப்பகுதிக்கு செல்வதில்லை என்றும் பக்தர்கள் பலர் நடந்தே செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.