திருப்பூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீவிபத்து!

Filed under: தமிழகம் |

ஏற்கனவே தமிழகத்தில் பல இடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்துள்ளது. அதில் தந்தை & மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெட்ரோல் பயன்படுத்தி இயக்கப்படும் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திருப்பூரில் இன்று சரவணன் என்பவருக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவர் உடனடியாக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை மட்டும் தனியாக கழட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தொடர்ச்சியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்தை சந்தித்து வருவது, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது மக்களுக்கும் இருக்கும் நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.