திருமணம் என்னும் நிக்காஹ் இசை வெளியீ

Filed under: சினிமா |

TS_2 copyநல்ல கதை அம்சம் உள்ள  காதல் படங்களுக்கு   என்றுமே மவுசு உண்டு. அதுவும் தரமான நகைசுவை, கதையின் இழையாக இருந்து , படத்தின் இசையும் கூடுதலாக சரியாக அமைந்து விட்டால் வெற்றி உத்திரவாதம் என்பதில் சந்தேகமே இல்லை . ஆஸ்கார் films  ரவிசந்திரனின் நேர்த்தியான தயாரிப்பில் , புதிய இயக்குனர் அனிஸ் இயக்க , கிப்ரானின் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் திருமணம் எனும் நிக்கா மேற்கூறிய அனைத்து வெற்றி அம்சங்களையும்  கொண்டு உள்ளது .

இனிமையான பாடல்களுக்கு என்றுமே மவுசு உண்டு என்பதற்கு உத்திரவாதம் தரும் வகையில் இப்படத்தின் இசையை Think music நிறுவனத்தினர் மிகுந்த போட்டிக்கு இடையே வாங்கி  உள்ளனர் .இந்த படத்தின் இசையை பற்றி சிலாகித்து பேசும் இயக்குனர் அனீஸ் , ஒரு படத்தின் பாடல்கள் அந்த படத்தின் விளம்பரத்துக்கு பெரிதும் உதவும் . வேறு எந்த விளம்பரத்தையும் விட அது மிக உதவும் . மயிலிறகு போல் வருடும் மெல்லிய இசையும் அதனுடன் இணைந்து வரும் இது வரை கேட்டிராத புதிய இசை அனுபவமும் படத்தின் பாடல்களுக்கு மட்டுமல்ல படத்தின் வெற்றிக்கும் உரமாக இருக்கும் என்றார் ..

Photos: