திருமண நாளை கொண்டாடிய சினிமா ஜோடி!

Filed under: சினிமா |

நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஜோடியாக இணைந்து நடித்தனர்.

இந்த இருவரின் ஜோடிப்பொருத்தம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. இதையடுத்து கடந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தங்களது முதலாவது திருமண நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு “உன்னை நேசிக்கும் உணர்வு ஒருபோதும் பழையதாகாது இனிய ஆண்டுவிழா என் அன்பே. 365 நாட்கள் எங்களின் வாழ்த்துகள்!” என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார் நிக்கி கல்ராணி.