திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!

Filed under: சினிமா,சென்னை,தமிழகம் |

சென்னை, ஏப்ரல் 23

திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 39 சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள்  சிரமமின்றி வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ் நோயால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திரைப்படத் துறையினர் நலவாரிய 21679 உறுப்பினர்களுக்கு,கொரோனா நிவாரண நிதியுதவி ரூ.1000/- ஐ வழங்கிட 09.04.2020 அன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் 13.4.2020 அன்று ரூபாய் 2 கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

திரைப்படத் துறையினர் நலவாரியஉறுப்பினர்கள் 21679 நபர்களில் இன்றைய தினம் வரை (23.04.2020) 7,489 உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூபாய் 74லட்சத்து 89ஆயிரத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் & டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம், தென்னிந்திய சினி டிவி செட்டிங் ஒர்க்கஸ் யூனியன், தென்னிந்திய திரைப்படம் ஸ்டில் புகைப்பட கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய சினி & டிவி போட்டோ ஃபிளட் ஒர்க்கஸ் யூனியன், தென்னிந்திய சின்னத்திரை துணை நடிகர்கள் & ஏஜென்ட்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட ஏஜென்டுகள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பு உதவியாளர்கள் சங்கம், திரைப்படம் மற்றும் சின்னத்திரை வெளிப்புற லைட்மேன் சங்கம், சேலம் திரைப்படம் விநியோகஸ்தர்கள் கவுன்சில், தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட மகளிர் ஊழியர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்,தென்னிந்திய நளபாக ஊழியர்கள் சங்கம், தென்னிந்திய வெண்திரை சக நடிகர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒப்பனை & சிகை அலங்கார கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள், சண்டை கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் ஒலிப்பதிவாளர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை வெளிப்புற தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலை இயக்குநர்கள் கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்படம் & டிவி தையற் கலைஞர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண நிதி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திரைப்படத் துறையினர் நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொரோனா நிவாரணநிதி கிடைக்கப் பெறாதவர்கள் தங்களின் சங்கத்தின் வாயிலாகவோ அல்லது திரைப்படத்துறையினர் நலவாரியம் அலுவலகம் (கலைவாணர் அரங்கவளாகம்) சென்னை-600 002 முகவரியை தொடர்புக் கொண்டு மின் அஞ்சல் வாயிலாக cinewelfare@gmail.com திரைப்படத்துறையினர் நலவாரிய உறுப்பினர் பதிவு எண், வங்கிக் கணக்கு புத்தகத்தில் உள்ளவாறு வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், ©, IFSC குறியீடு எண் மற்றும் MICR குறியீடு எண் ஆகியவற்றை விரைவாக அனுப்பி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியை பெற்று பயன் பெறுமாறு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.