தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள்!

Filed under: தமிழகம் |

வரும் 28ம் தேதி தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த அறிவிப்பை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்துத்துறை கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கேகே நகர் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகளுக்கான ரயில் முன்பதிவு முடிந்துவிட்டது.ரயிலில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் தீபாவளி சிறப்பு பேருந்துகளை தான் நம்பியுள்ளனர். எனவே தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியானவுடன் மிக வேகமாக முன் பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.