தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் தீபாவளி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் நிலையில் தீபாவளி வியாபாரம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.