இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தினால் 6,471 பே​ர் பயன் அடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Filed under: தமிழகம் |

காணொலி வழியாக மருத்துவர்களிடம் கொரோனா வைரஸ் சிகிச்சை பற்றி மக்கள் ஆலோசனை பெற்று வரும் இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தால் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 13ஆம் தேதி இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். உரிய பயிற்சிக்கு பின்பு 617 அரசு மருத்துவர்களை கொண்டு இந்த சேவை வழங்கி வருகிறது என்றார்.

இந்தியாவில் அதிக மருத்துவர்களை கொண்டும், அதிக பயனாளிகளுக்கு சேவையை வழங்கியதிலும் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுவரை இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தினால் 6,471 பே​ர் பயன் அடைந்துள்ளனர் என்றார்.