தீம் பார்க்கில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

Filed under: தமிழகம் |

தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தீம் பார்க்குகளுக்கு அழைத்து செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் மல்லூரியில் ஒரு தனியார் தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் எருமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சௌடேஸ்வரன் கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்தினருடன் இந்த தீம் பார்க் சென்றுள்ளார். அப்போது, நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தபோது, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.