நாளை மாலை முதல் தூத்துகுடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை முதல் 15ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறினார். இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.