கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.