தென்காசியில் திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்ற பகுதியைச் சேர்ந்த இசக்கிலட்சுமி என்ற இளம் பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் இசக்கிலட்சுமி ஓடிவிட்டதால் திருமணம் நின்று போனது. ராம்குமார் மற்றும் இசக்கிலட்சுமி திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்துள்ளனர். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இசக்கி லட்சுமி தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். இந்நிலையில் நேற்று இசக்கிலட்சுமி தனது உறவினர் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.