தென்னக மக்கள் இயக்கத்தினரின் வாகனங்களை கன்னியாகுமரி மாவட்ட எல்கையான ஆரல்வாய்மொழியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு .
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 84 வது நினைவு தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் ஆங்காங்கே மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில்
உள்ள வ உ சி மணிமண்டப சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தென்னக மக்கள் இயக்கம் சார்பில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏராளமானோர் சென்றனர்.
ஆனால் குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் போலீசார் இந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் கொண்டு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..