தெருநாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறியதால் பரிதாபமாக பலியானதால் பரபரப்பு!
மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தெருநாய்கள் அச்சிறுமியை கடித்து குதறியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5 வயது சிறுமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த 6 தெரு நாய்கள் சிறுமியை மாறி மாறி கடித்து குதறின. இதனால் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட ஒரு சில பகுதிகளில் தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 5 வயது சிறுமி மத்திய பிரதேசத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.