‘தெறி’ இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்?

Filed under: சினிமா |

கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அட்லியின் இணை இயக்குனர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அட்லி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழில் சூப்பர் ஹிட்டான “தெறி” திரைப்படம் இந்தியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.