தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

தெற்கு ரயில்வே இன்று மக்களவை தேர்தலுக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இன்றும் சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.

இன்று ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் மக்கள் கூட்டம் இன்று வரை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை சென்னை திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக மாலை 18.30க்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.