தேசிங்கு பெரியசாமி தகவல்!

Filed under: சினிமா |

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்” என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு ரஜினி பாராட்டிய ஆடியோ வெளியான நிலையில், இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தேசிங்கு பெரியசாமி, “சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எதிர்காலத்தில் ஒரு படம் இயக்குவேன்” என்று கூறியுள்ளார்.