கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினி மீண்டும் கூட்டணி!?

Filed under: சினிமா |
சூப்பர் ஸ்டார் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் திரைக்கதை பற்றிய விவாதக் குழுவை சேர்ந்தவர்கள் இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். “பீஸ்ட்” படத்தின் ரிலீசுக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். அதையடுத்து தற்போது படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குனர் நெல்சன் மற்றும் அவரது குழுவினர் இறங்கியுள்ளனர். தற்போது நெல்சனின் திரைக்கதைக்கு சில ஆலோசனைகள் வழங்க கே.எஸ்.ரவிக்குமாரை படக்குழு அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரஜினி இருவரின் கூட்டணியுடன் வெளிவந்த திரைப்படங்கள் வெற்றியை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.