தேனி மக்கள் மகிழ்ச்சி!

Filed under: தமிழகம் |

தேனி மக்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுரையிலிருந்து தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த இந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன. தற்போது பல ஆண்டுகள் கழித்து இந்த வழிதடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மே 27ம் தேதி முதல் தினசரி காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து தேனிக்கும், மாலை 06.15 மணிக்கு தேனியில் இருந்து மதுரைக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.