தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை உறுதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்று கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. இந்த கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுக பெரிய கட்சி என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அவ்வாறு கூறுவதில் தவறில்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும்” என்று அவர் கூறினார்.