தேர்தல் முறையை பற்றி கமல்ஹாசன் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் என்று கூறியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார். அவர் எதிர்பார்த்த கட்சி ஆரம்பத்தில் வளர்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அவர் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர். அதன்பின், பிக்பாஸ் மற்றும் சினிமாவில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவரது நடிப்பில் “விக்ரம்” வெளியான நிலையில், விரைவில் “இந்தியன் 2” வெளியாக உள்ளது. அவ்வப்போது, அரசியல் குறித்து கருத்துக் கூறி வரும் கமலஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல்முறை அவசியம் என கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “பல்கலைகளில் துணை வேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டதிருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட சட்டசபைக்கு மதிப்பளித்து, விரைவில் சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது போன்று கவர்னர் தேர்விலும் தேர்தல் முறை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.