தேர்வு முடிவுகள் எப்போது?

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்வு முடிவுகளின் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நாளை (ஜூன் 17)ம் தேதியும், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதியும் வெளியாகுமென அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளைக்கு பதிலாக ஜூன் 20ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல் முறை. பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in ஆகிய வலைதளங்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள தலைமை நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.