தொடங்கியது அக்னி நட்சத்திரம்!

Filed under: தமிழகம் |

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இன்றிலிருந்து அக்னி நட்சத்திர காலம் தொடங்கி விட்டது. தொடங்கிய இன்றே பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு பல மாநிலங்களில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால் வெயில் அதிக அளவில் வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே நடமாடுவதை மக்கள் குறைக்க வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அக்கினி வெயில் தொடங்கியுள்ள இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

தர்மபுரி, கரூர், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட் முதல் 99 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளன.