தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Filed under: தமிழகம் |

தொடர்ந்து கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையின் போது மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் மற்றும் மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையின் முதல் நாளன்று திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதை அடுத்து மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.