தொடர் தோல்வியை சந்திக்கும் நயன்தாரா!

Filed under: சினிமா |

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இது கெட்ட நேரம் என்று ஒட்டுமொத்த திரையுலகே பேசி வருகிறார்களாம்.

“கனெக்ட்” திரைப்படம் தோல்வியால் நயன்தாரா மார்க்கெட் எதிர்பாராத அளவிற்கு இறங்கியது. பின்னர் விக்னேஷ் சிவன் அஜீத் 62 படத்திலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இதற்கு வக்காலத்து வாங்கிய நயன் ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். இப்படி தொடர் சிக்கலுடன் கூடுதல் பிரச்சனை ஒன்று வந்துள்ளது. என்னவென்றால் முன்னணி தயாரிப்பாளரின் வெற்றிப்படத்தில் நடித்த நயன்தாரா அவரது தயாரிப்பிலே அடுத்தடுத்த இரண்டு படங்களில் கமிட் செய்யப்பட்டாராம். இதற்காக ரூ.20கோடி சம்பளம் பேசப்பட்டு முன் பணம் கூட வாங்கிய நயன்தாரா புருஷன் பிரச்சனையில் தலையிட்டு இதற்கு கால்சீட் கொடுக்காமல் தாமதித்து வந்துள்ளார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை பிடுங்கிக்கொண்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.