தொல். திருமாவளவன் கைது!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிரடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்துள்ளது.

மத்திய அரசு தமிழ்நாடு கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை கட்சிகள் சார்பில் ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு திருமாவளவன் ஆளுநர் ஆளுகையை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாக சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.