தொழிற்கல்வி பாடம் ரத்து!

Filed under: தமிழகம் |

9 மற்றும் 10ம் வகுப்பிற்கான தொழில்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ, மாணவர்களும், தொழிற்கல்வி பாடத்திட்டம் தேவையில்லை என்று சில மாணவர்களும் கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.