கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா!

Filed under: இந்தியா |

கர்நாடகா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா வைரஸ் காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வைரசால் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், கர்நாடாக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தியது.

அந்த தேர்வு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 7.60 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

மேலும், நேற்று 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 14 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 32 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில அரசு தெரிவித்தது.