தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம்!

Filed under: சினிமா,விளையாட்டு |

கிரிக்கெட் வீரர் தோனி புதியதாக திரைப்பட நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.

அந்நிறுவனத்தின் பெயர் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டது. “எல்ஜிஎம்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட்டோர் நடிக்கவுள்ளனர். படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். இன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.