நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Filed under: தமிழகம் |

பேருந்து நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் எதிரொலி: பேருந்து நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் பணிபுரியும் நடத்துனர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது போக்குவரத்துதுறை. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் எச்சில் தொட்டு டிக்கெட் தரக்கூடாது, இந்த நடைமுறையை அனைத்து நடத்துநர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கட்டுப்பாடு விதித்துள்ளது.