நடிகர் கார்த்தியின் டுவிட்டர் பதிவு!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் சினிமா பயணம் 25 ஆண்டுகளாகிறது. அதை குறிப்பிட்டு அவரது தம்பி நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களையும், பாராட்டையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு விஜய் நடித்த “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இத்திரைப்படம் 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து “சூர்யா 25” என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தைக் குறிப்பிட்டு, அவரது தம்பி கார்த்தி, “அவர் இரவும் பகலும் உழைத்து தன் மைனஸ்களையே பிளஸ்ஸாக்கிக் கொண்டார். அவர் சாதிப்பதையே தன் லட்சியமாக்கிக் கொண்டார். அவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் மனதில் இடம்பிடித்துள்ளார். அவர் என் சகோதர்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு சூர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில், “வந்தியத் தேவா, அண்ணானா பொறந்திட்டு, பட்ற பாடு இருக்கே’’ என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.