நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” திரைப்படத்தின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “சர்தார்.” இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், “சர்தார்” திரைப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது குறித்து, கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மக்களே, “சர்தார்” திரைப்படத்தை வெற்றியடைய செய்ததற்காக உங்களுக்கு மிக்க நன்றிகள். உங்கள் பாராட்டுகளில் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.



