நடிகர் நாசருக்கு காயம்

Filed under: சினிமா |

மிகப்பிரலமான குணச்சித்திர நடிகர் நாசர் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடிகர் நாசர் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பில் அவர் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் நாசருக்கு லேசான காயம்தான் என்றும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடிகர் நாசருக்கு காயம் என்ற தகவல் திரை உலகில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.