நடிகர் பரத் சினிமா குறித்து பேச்சு!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டே நடிகர் பரத்தின் 50வது திரைப்படத்திற்கு “லவ்” என்ற டைட்டில் வைக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்க, மற்ற முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார் மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சக்திவேல் இயக்கியுள்ளார்.

ஜூலை 28ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. அதையொட்டி படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் கொலை திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரெயிலர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பரத், “சினிமாவில் தொடக்கம் நன்றாக அமைந்தாலும் போக போக கடினமானதாக இருக்கும். சினிமாவில் 10 ஆண்டுகள் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயம்தான். நான் இதுவரை நடித்த 50 படங்களில் சில படங்களில் சொதப்பி இருப்பேன். தற்போது சினிமா ஓடிடி, தியேட்டர் என இரண்டாக பிரிந்துவிட்டது. அதைப் பற்றி பேசினால் பெரிய விவாதமே ஆகிவிடும்” என கூறியுள்ளார்.