நடிகர் விக்ரம் பட இசை வெளியீட்டு விழா!

Filed under: சினிமா |

சென்னை பீனிக்ஸ் மாலில் “கோப்ரா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

விக்ரம் நடித்த வெளிவந்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக “கோப்ரா” உருவாகி உள்ளது. மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டானர். கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அன்று திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டின் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதேபோல் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விக்ரம். அதன் காரணமாக “பொன்னியின் செல்வன்” டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இன்று நடைபெறவிருக்கும் “கோப்ரா” இசை வெளியீட்டில் நடிகர் விக்ரம் கலந்து கொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.