நடிகர் விஜயகாந்தின் ரிஸ்க்! ஏவிஎம்மின் பதிவு!

Filed under: சினிமா |

நடிகர் விஜயகாந்த் நடித்த “சேதுபதி ஐபிஎஸ்” திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் விஜய்காந்த், மீனா உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்க, பி. வாசு இயக்கினார்.ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அப்போது சூப்பர் ஹிட் திரைப்படமான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் விஜயகாந்தின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. அதிலும் அவர் திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் பிரம்மாண்ட கடிகாரம் ஒன்றில் ஏறி வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஸ்டண்ட் காட்சி பாராட்டுகளைக் குவித்தது. இப்போது ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான குகனின் மகளான அருணா இந்த ஸ்டண்ட் காட்சிக்காக விஜயகாந்த் எந்த பாதுகாப்பும் இல்லாமல் துணிச்சலாக அந்த கடிகாரத்தில் ஏறும் புகைப்படத்தைப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் தற்போது உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் இப்புகைப்படம் அவரின் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.