நடிகர் விஜய்க்காக புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

நடிகர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் வெற்றி பெற உண்மையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் எனும் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை அவர் பதிவு செய்ததோடு, வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார். அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரியை ஒரு சிலர் விமர்சித்தும், ஒரு சிலர் வரவேற்றும் வருகின்றனர். தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியில் பேசிய, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “2026 தேர்தல் வெற்றிக்கு உண்மையாக உழைக்க வேண்டும். தேர்தல் வெற்றி உங்கள் கையில் உள்ளது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு நமது ஒரே தலைவர் விஜய், ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் நிற்பதாக கருத வேண்டும். அவரது வெற்றிக்காக உழைக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.