நடிகர் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார்!

Filed under: சினிமா |

எஸ்.ஜே. சூர்யா விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்து வரும் “வாரிசு” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. “வாரிசு” படத்தைப் பற்றிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகுமென தெரிகிறது. ஏற்கனவே விஜய்யும், எஸ்.ஜே. சூர்யாவும் “நண்பன்”, “மெர்சல்” போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.