108 ஆம்புலன்ஸ் ஓட்டிய ரோஜா – கிளம்பிய சர்ச்சை!

Filed under: சினிமா |

சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று பெரும் வெற்றி பெற்றவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். இவர் ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார்.

ஆந்திர மாநிலத்தில் முழுமையான மருத்துவ வசதிகள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பித்து வைத்தார். இதில் நகரி தொகுதி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்களை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரோஜா பின்னர் ஒரு ஆம்புலன்சை 20 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

எம்எல்ஏ ரோஜா சாகசம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டியுள்ளார் என தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.