நடிகர் விஜய்யுடன் தோனி நடிப்பது குறித்து படக்குழுவினர் விளக்கம்!

Filed under: சினிமா,விளையாட்டு |

சமீபத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படத்தின் நடிப்பை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் தற்போது நடித்து வரும் “கோட்” திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் படக்குழு வட்டாரத்தில் இந்த தகவல் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப்போது தோனி ஐபிஎல் போட்டிகளில் பிஸியாக இருந்துவரும் நிலையில் எப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.