வொண்டர் வுமனுக்கே டப் கொடுக்கும் ஆலியா பட்!

Filed under: சினிமா |

ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆல்யா பட். தற்போது இவரும், பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கெடாட்டும் இணைந்து நடித்துள்ள Heart of Stone படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் “ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்,” “வொண்டர் வுமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கேல் கெடாட். இவர் நடிப்பில் ஹாலிவுட் இயக்குனர் டாம் ஹார்ப்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Heart of Stone. இப்படத்தில் இந்தி நடிகை ஆலியா பட் முக்கியமான வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகையே அழிக்கக்கூடிய அளவு சக்தி வாய்ந்த ஆர்க் என்னும் ஆயுதத்தை கேல் கெடோட் குழுவினர் பாதுகாக்க அதை ஆலியா பட் திருடி சென்று விடுவதாக டிரெய்லரில் காட்டப்படுகிறது. ஆலியா பட் அந்த ஆர்க்கை கொண்டு என்ன செய்ய போகிறார்? கேல் கெடாட் குழுவினர் அதை தடுத்தார்களா? என்பது சுவாரஸ்யமான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.