நடிகர் விஜய் ஆண்டனியின் டுவிட்டர் பதிவு!

Filed under: சினிமா |

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில், “கடவுள் கிட்ட நான் இதைத்தான் கேட்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி சில ஆண்டுகளுக்கு முன் நடித்த நான் என்ற படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இப்படத்தை அடுத்து, தொடர்ந்து நடித்தார். பிச்சைக்காரன், அண்ணாத்துரை உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற நிலையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆண்டனி சமுகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தன் கருத்துகள் வெளியிடுவார். இந்த நிலையில், இன்று அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, க்ஷீமீஹீuமீst-ஆ கேப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.