நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாவதால் சென்னை மெட்ரோ ரெயில்களில் இப்படத்தை லலித்தின் செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் புரமோசன் செய்து வருகின்றன. அஜீத்தின் “துணிவு” திரைப்படத்துடன் விஜய்யின் “வாரிசு” மோதவுள்ளதால், கடும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை காலை 9 மணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பனையூரியில் உள்ள விஜய் அலுவலகத்தில் அவர்களை விஜய் சந்தித்துள்ளார்.