நடிகர் விஜய் திரைப்பட பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

வரும் பொங்கலன்று நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் சிங்கிள் பாடல் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

“ரஞ்சிதமே ரஞ்சிதமே” என்று தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளார். விவேக் எழுதி, தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் முழுவதுமாக வரும் 5ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சற்றுமுன் வெளியாகிய இப்பாடலின் வீடியோ 30 செகண்டுகள் மட்டுமே இருந்த போதிலும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.