நடிகர் விஜய் படத்திற்கு நோட்டீஸ்!

Filed under: சினிமா |

விலங்குகள் நலவாரியம் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு’’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு நிகரான பட்ஜெட்டில், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், விஜய்- மற்றும் ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாரிசு.” படம் வரும் பொங்கல்- பண்டிகையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமான ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் “ரஞ்சிதமே” பாடலும் ரிலீசானது. “வாரிசு” திரைப்படத்தில் யானைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால், இதற்கு, முறைப்படி, விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாருக்கு, அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான விளக்கமளிக்க வேண்டுமென படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.