நடிகர் விஷால் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை குறித்து சாடல்!

Filed under: சினிமா |

நடிகர் சரத்குமாரை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருப்பது சர்சசையை கிளப்பி உள்ளது.

நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழகம் முழுதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகிறது. சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதுபற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர் “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் ரம்மியை மக்கள் விளையாடுவதாக பலர் சொல்கிறார்கள். நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட மக்களிடம் கேட்டேன். ஆனால் யாரும் ஓட்டு போடவில்லை. பின்னர் சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சரத்குமாரின் இக்கருத்துக்கு மறைமுகமாக கடுமையான நடிகர் விஷால், “என்னையும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் நான் நடிக்கவில்லை. உண்மையாக உழைத்து சம்பாதிக்கும் காசுதான் உதவும்” என விமர்சித்துள்ளார்.