நடிகை கஜோல் பதிவால் ரசிகர்கள் வேதனை!

Filed under: சினிமா |

“வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் தனுஷூடனும், அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் “மின்சார கனவு,” உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை கஜோல். தற்போது 48 வயதாகும் கஜோல் இன்னும் பாலிவுட்டில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

1999ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கஜோல், டுவிட்டரில் “இப்போது வாழ்க்கையில் மிக கடினமான நேரத்தை எதிர்கொண்டு இருப்பதால் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க போகிறேன்” என்று கருப்பு நாள் என்பதை உணர்த்தும் வகையில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு என்ன ஆச்சு என எல்லோரும் ஷாக் ஆகியுள்ளார்.